தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ஆட்டோ டிரைவர் இறப்பு: உறவினர்கள் மறியல்

ஆட்டோ டிரைவர் இறப்பு: உறவினர்கள் மறியல்

ஆட்டோ டிரைவர் இறப்பு: உறவினர்கள் மறியல்


ADDED : பிப் 27, 2024 07:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 07:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை : சிவகங்கை சி.பி., காலனி ஆட்டோ டிரைவர் ராமநாதன் 52, சாலை விபத்தில் உயிரிழந்தார். இதற்கு காரணமான அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிய கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கை சி.பி.,காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிப்., 23ல் தனது ஆட்டோவில் காஞ்சிரங்காலில் சென்றார். தனியார் பள்ளி அருகே ஆட்டோவை திருப்பியுள்ளார். அப்போது திருப்புத்துாரில் இருந்து, சிவகங்கை நோக்கி வந்த அரசு பஸ், ஆட்டோவில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் காயமுற்ற ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, ஆட்டோ டிரைவரின் உறவினர்கள், நேற்று காஞ்சிரங்கால் அருகே அரசு பஸ் டிரைவர் செல்வத்தின் மீது வழக்கு பதியக்கோரி மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி சமரசம் செய்து வைத்தபின், போராட்டத்தை கைவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us