மினி பஸ்சை சிறை பிடித்து ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்
மினி பஸ்சை சிறை பிடித்து ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்
ADDED : மார் 07, 2026 07:36 AM

திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரத்தில் நேற்று புதிதாக இயக்கப்பட்ட மினி பஸ்சை சிறை பிடித்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்புவனம் வந்து அங்கு இருந்து ஆட்டோக்கள் மூலம் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். பக்தர்களை நம்பி 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மடப்புரத்தில் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் மானா மதுரையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் மடப் புரத்தில் இருந்து திருப்பு வனம், லாடனேந்தல் கருங்குளம், இடைக் காட்டூர் வழியாக முத்தனேந்தல் வரை 5 ஆண்டுகளுக்கு மினி பஸ் இயக்க அனுமதி பெற்று நேற்று முதல் தொடங்கியுள்ளார்.
மினி பஸ் இயக்கப் பட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி மடப்புரத்தில் நேற்று மினி பஸ்சை மறித்து வெயிலில் ஆட்டோ ஓட்டுநர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருப்புவனம் போலீசார் இரு தரப்பினரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங் களால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் மினி பஸ் இயக்கப்பட்டால் மிகுந்த சிரமம் ஏற்படும். பஸ்கள் வராத பாதையில் இயக்காமல் அடிக்கடி பஸ்கள் வரும் பாதையில் மினி பஸ் இயக்கப்படுகிறது, என்றனர்.
