/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 09, 2025 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சகாயம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜா முன்னிலை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் பேசினார். சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மருது, நகர் செயலாளர் பாண்டி, மாநில குழு உறுப்பினர் மீனாள் சேதுராமன் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் நல வாரியம் மூலம் ஆட்டோ செயலியை துவக்க வேண்டும். டூவீலர் பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும். பதிவு செய்த ஆட்டோ தொழிலாளிக்கு பொங்கல் போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

