மானாமதுரையில் ஆவின் பால் பாக்கெட்டிற்கு தட்டுப்பாடு: தனியார் பாலுக்கு மாறும் வாடிக்கையாளர்கள்
மானாமதுரையில் ஆவின் பால் பாக்கெட்டிற்கு தட்டுப்பாடு: தனியார் பாலுக்கு மாறும் வாடிக்கையாளர்கள்
UPDATED : ஆக 11, 2026 02:13 AM
ADDED : ஆக 11, 2026 02:11 AM

மானாமதுரை; மானாமதுரை, இளையான்குடிக்கு சில மாதங்களாக ஆவின் பால் மற்றும் ஆவின் நிறுவன பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆவின் விற்பனை நிலையங்கள் மற்றும் முகவர்களிடம் தினசரி காலை பால் பாக்கெட் வாங்க பொதுமக்கள் வருகின்றனர். தற்போது வழக்கமான நேரத்திற்கு பால் வாகனங்கள் வராமல் தாமதமாக வந்து பின்னர் பால் வினியோகம் செய்யப்படுகிறது.
குறிப்பாக அதிகாலை நேரத்தில் பால் கிடைக்காத தால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப் படுகின்றனர். சில விற்பனை நிலையங்களில் பால் வந்தவுடன் குறுகிய நேரத்திலேயே விற்று விடுவதால் பால் கிடைக்கா மல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்படுகிறது.
பால் மட்டுமின்றி ஆவின் நிறுவன தயாரிப்பு களான தயிர், மோர், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களும் தேவையான அளவில் கிடைப்பதில்லை என நுகர்வோர் கூறு கின்றனர்.
ஆவின் பால் பூத் ஏஜன்ட் செந்தில் கூறிய தாவது:
6 மாதங்களுக்கு முன் தினமும் அதிகாலை 3:00 மணிக்கே காரைக்குடி யிலிருந்து பால் மற்றும் பால் பொருட்கள் வந்து விடும். ஆனால் தற்போது காலை 7:00 மணி வரை வராமல் இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு தேவையான அளவு வழங்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம்.
மேலும் தினந்தோறும் 40 சதவீத பால் பாக்கெட்கள் மட்டுமே அனுப்புகின்றனர். நெய்,வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி 6 மாதத்திற்கும் மேலாகிறது. இதனால் எங்களுக்கும் வருமானம் மிகவும் குறைந்துள்ள நிலையில் வாடிக்கையாளர்களையும் திருப்தி படுத்த முடியாத நிலையில் உள்ளோம் என்றனர். இதனால் தனியார் பாலுக்கு பலர் மாறி வருகின்றனர்.
ஆவின் விற்பனை பிரிவு அதிகாரி கூறியதாவது:
சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிக மாக இருப்பதால் பால் வரத்து மிகவும் குறைந்து பால் பாக்கெட் மற்றும் பால் பொருட்களின் தயாரிப்பு குறைந்து தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் சரி செய்யப்படும் என்றார்.
