ADDED : அக் 08, 2024 04:26 AM

அ நிறம் | அளவு
காரைக்குடி : காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட கவனகக்கலை மன்றம் சார்பில் கல்வியாளர்கள் சங்கம விழா நடந்தது. இதில் கல்விப் பணிகளிலும் சமுதாயப் பணிகளிலும் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கும், சமூக செயல்பாட்டாளர்களுக்கும் கல்விச்சுடர், சேவைச்சுடர் விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஆசிரியர் முத்துக்குமார் எழுதிய நூல்களை பார்த்திபராஜா, முன்னாள் அழகப்பா பல்கலை துணை வேந்தர் சுப்பையா, துணை மேயர் குணசேகரன், தொழிலதிபர் முத்துராமலிங்கம், பேராசிரியர் தேனப்பன், டாக்டர்கள் பிரபு, திருப்பதி வித்யாகிரி பள்ளி முதல்வர் ஹேமமாலினி கவுன்சிலர் பிரகாஷ், மன்ற பொருளாளர் கண்ணன் பெற்றுக் கொண்டனர். மன்ற தலைவர் முத்துக்குமார் வரவேற்றார். செயலாளர் பிரகாஷ் மணிமாறன் நன்றி கூறினார்.
