ADDED : நவ 06, 2024 08:00 AM
அ நிறம் | அளவு
இளையான்குடி : இளையான்குடி மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுதேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் முசாபர் அப்துல்ரகுமான் தலைமை வகித்தார்.
டாக்டர் பாபு இஸ்மத் ரசாக் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பேரூராட்சி தலைவர் நஜூமுதீன், தலைமை ஆசிரியர் முகமது இல்யாஸ் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் இப்ராகிம்ஷா நன்றி கூறினார். உதவி தலைமை ஆசிரியர் சேக்உதுமான் தொகுத்து வழங்கினார்.
