நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி பர்மா காலனி சிவானந்தா மண்டபத்தில் 14வது ஆண்டு முருகன் நற்பணி மன்ற பூஜை, ஆன்மிக நுால் வெளியீட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் முருகனுக்கு, கண்டனுார் சி.ராம.சொ.பழனிமலை அலங்காரம் செய்தார்.
காஞ்சிபுரம் வேதமூர்த்தி குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. வேல் அபிஷேகமும் முருகன் பஜனையும் தீபாராதனை நடந்தது. முருகன் நற்பணி மன்றம் சவுரிராஜன் வரவேற்றார். பழநி பாதயாத்திரை பழ.பழநியப்பன் தலைமையேற்று விருதினை வழங்கி, சக்திவேலன் பாமாலை என்ற நுாலை வெளியிட்டார். வங்கி வியாபார தலைவர் பாலமுரளி கிருஷ்ணன் நுாலை பெற்றுக் கொண்டார்.
மீனாதமிழரசி பேசினார். முருகன் நற்பணி மன்ற அரசி.முத்துக்குமார் பல்துறை சாதனையாளர்களை அறிமுகம் செய்தார். செல்லப்பன் நன்றி கூறினார்.