UPDATED : ஆக 29, 2026 04:46 PM
ADDED : ஆக 29, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை:தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து எழுத்தாளர்களுக்கு விருது வழங்கியது.
பெருமன்ற மாநில தலைவர் கங்கா தலைமை வகித்தார். நியூ செஞ்சுரி முதுநிலை விற்பனை சீரமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் பழனியப்பன், முதல்வர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் முன்னிலை வகித்தனர். மாநில பொது செயலாளர் அறம் வரவேற்றார். ஆனந்தா கல்லுாரி செயலாளர் செபாஸ்டின் ஆசியுரை ஆற்றினார். ராமசந்திரன் அறிமுக உரையாற்றினர். அரசு முதன்மை கணக்கு தணிக்கையாளர் திருப்பதி வெங்கடசாமி விருது வழங்கி பேசினார்.
