ADDED : செப் 11, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி, செப். 12 -
அமராவதி புதுார் ராஜராஜன் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தின விழா நடந்தது. முதல்வர் சிவக்குமார் வரவேற்றார்.
ராஜராஜன் கல்வி குழும தலைவர் எஸ். சுப்பையா தலைமையேற்று பேசினார். அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் ரவி கலந்து கொண்டார். 100 சதவீத தேர்ச்சி வழங்கிய 27 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. முதல்வர்கள்,பேராசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் பாலசுந்தரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். துணை முதல்வர் மகாலிங்க சுரேஷ் நன்றி கூறினார்.
