/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிரதமரின் சூரிய ஒளி வீடு திட்டம் மானியம் குறித்த விழிப்புணர்வு
/
பிரதமரின் சூரிய ஒளி வீடு திட்டம் மானியம் குறித்த விழிப்புணர்வு
பிரதமரின் சூரிய ஒளி வீடு திட்டம் மானியம் குறித்த விழிப்புணர்வு
பிரதமரின் சூரிய ஒளி வீடு திட்டம் மானியம் குறித்த விழிப்புணர்வு
ADDED : அக் 07, 2025 03:56 AM
சிவகங்கை: பிரதமரின் சோலார் மின் திட்டத்தின் கீழ் மானியத்தில் வீடுகளில் சோலார் பேனல் அமைத்து, மின் கட்டணத்தை சிக்கனம் செய்வது குறித்த விழிப்புணர்வு கூட்டம் சிவகங்கையில் நடந்தது.
கூட்டத்திற்கு சிவகங்கை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஆதிலட்சுமி தலைமை வகித்தார். செயற்பொறி யாளர் முருகையன் வரவேற்றார். உதவி செயற்பொறியாளர்கள் தேன்மொழி, சண்முகநாதன் முன்னிலை வகித்தனர். உதவி பொறியாளர்கள் மல்லிகாராஜா, காதர் ஒலி ஆகியோர் பங்கேற்றனர்.
பிரதமரின் சோலார் வீடு மின் திட்டத்தின் கீழ் வீடுகளில் சோலார் பொருத்த அரசு குறைந்தது ரூ.30,000 முதல் 78,000 வரை மானியமாக வழங்குகிறது. வீடுகளில் 1 முதல் 5 கிலோ வாட் வரை மானியத்தில் சோலார் மின் வசதி பெறலாம் என பொது மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.
ஏற்பாடுகளை சிவகங்கை நகர் மின்வாரிய அலுவலர்கள் செய்து இருந்தனர்.