ADDED : செப் 26, 2026 04:44 AM
சிவகங்கை: சிவகங்கை தொழிலாளர் துறை சார்பில் வாரச்சந்தை வியாபாரிகளிடம் எடையளவு முத்திரையிடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொழிலாளர் துணை ஆய்வாளர் ஜெனட், உதவி ஆய்வாளர் பிரேம் குமார் வாரச்சந்தை வியாபாரிகளிடம் சட்டமுறை எடையளவு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி தராசுகளை முத்திரையிட்டு பயன்படுத்துமாறு அறிவுறுத்தினர். வியாபாரிகளிடம் அவர்கள் பயன்படுத்தும் மின்னனு தராசுகள், மேடை தராசுகள், வில் தராசுகள் ஆகியவை வருடத்திற்கு ஒரு முறையும், மற்றும் பிற மேஜை தராசுகள், விட்டத் தராசுகள் எடைகற்கள், நீட்டல் அளவைகள் இரண்டு வருடத்திற்கு ஒரு முறையும் மறுபரிசீலனை செய்து அரசு முத்திரையிட்டு பயன்படுத்தவேண்டும் என்றும், முத்திரையிடாமல் எடையளவுகளை பயன்படுத்தும் வியாபாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
