ADDED : மே 07, 2025 02:14 AM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: தேவகோட்டை சப் கோர்ட்டில் மாவட்ட, வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் உலக தொழிலாளர் தினம் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் மாவட்ட சட்ட பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி ராதிகா தலைமையில் நடந்தது.
வக்கீல் சேவற்கொடியோன் தொழிலாளர் சட்டம் குறித்தும் வக்கீல் குமார் பெண்களுக்கான சட்டங்கள் பற்றி விளக்கினர். சார்பு நீதிபதி ராதிகா சட்ட பணிகள் குழுவை அணுகுவது பற்றி கூறினார். வக்கீல்கள் முத்தரச பாண்டியன், முத்துக்குமார், ரமேஷ் காந்தி, புவனேஸ்வரி, சமூக ஆர்வலர் ரோனிகா பங்கேற்றனர்.
