ADDED : மே 07, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனத்தில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக போலீஸ் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
சிறப்பு எஸ்.ஐ., சகுந்தலா தலைமையில் ஏட்டுக்கள் அக்னிராஜன், முத்துவீரு ஆகியோர் திருப்புவனம் ஆட்டோ ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி போதைப்பொருளுக்கு எதிராக பிரசாரம் செய்தனர்.