ADDED : பிப் 05, 2024 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு சிவகங்கையில் ெஹல்மெட் விழிப்புணர்வு வாகன ஊர்வலம் நடைபெற்றது.
கலெக்டர் அலுவலகம் முன் துவங்கிய ஊர்வலத்தை கலெக்டர் ஆஷா அஜித் கொடியசைத்து துவக்கி வைத்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், சிவகங்கை டி.எஸ்.பி., சிபிசாய் சவுந்தர்யன் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம், சிவகங்கை இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, எஸ்.ஐ., சண்முகபிரியா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் குலசேகர மந்திர செல்வி, எஸ்.ஐ.,க்கள் பாலுச்சாமி, அழகுராணி உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து டூவீலரில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர். வட்டார போக்குவரத்து கழக ஊழியர்கள் ஏற்பாட்டை செய்திருந்தனர்.

