ADDED : மார் 12, 2024 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி நேஷனல் பயர் அண்ட் சேப்டி கல்லுாரி, நேஷனல் கேட்டரிங் கல்லுாரி மற்றும் காரைக்குடி போலீசார் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சமூக நிர்வாகம் குறித்த தலைமை பண்பு என்ற தலைப்பில் தேசிய பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு பாதுகாப்பு குறித்த ஓவியம், கட்டுரை பேச்சு போட்டி நடந்தது .
தாளாளர் சையது தலைமையேற்றார். கல்வி குழும இயக்குனர் மனோகர் நிர்வாக இயக்குனர் தினேஷ் முன்னிலை வகித்தனர்.
முதல்வர் தனசீலன் வரவேற்றார்.

