ADDED : ஜன 07, 2026 05:40 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல்துறை மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம் விழிப்புணர்வு ஊர்வலத்தை சிவகங்கையில் எஸ்.பி.,சிவபிரசாத் துவக்கி வைத்தார். கூடுதல் எஸ்.பி.,கள் சுகுமார், பிரான்சிஸ், தேவகோட்டை டி.எஸ்.பி., கண்ணன் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு புள்ளியியல் ஆய்வாளர் கண்ணதாசன் வரவேற்றார். மாவட்ட அரசு சிறப்பு வழக்கறிஞர் துஷாந்த் பிரதீப் குமார், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முத்துலட்சுமி, மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினர் பூமிநாதன் பேசினர்.
எஸ்.ஐ., சேகரன், சிறப்பு எஸ்.ஐ.,க்கள் ஜோதிமணி, அறிவழகன் கலந்து கொண்டனர். ஓவிய போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. துணை தலைமை ஆசிரியர் ராமசாமி நன்றி கூறினார்.
