ADDED : நவ 13, 2026 06:49 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மறுவாழ்வு அலுவலர் செல்வ அபிராமி முன்னிலை வகித்தார். சமூக நலத்துறை அதிகாரிகள் கே.சுதா, கே.ஈஸ்வரி, வழக்கறிஞர் முருகன் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டம் குறித்து விளக்கம் அளித்தனர். சமூக தலையீட்டு நிபுணர் பசுருதீன் நன்றி கூறினார்.
