ADDED : ஜன 01, 2025 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி : பூவந்தி மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கலை கல்லூரியில் போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. முதல்வர் விசுமதி தொடங்கி வைத்தார்.
போதைப்பொருட்களால் இளைய சமுதாயம் பாதிக்கப்படுவது குறித்து பூவந்தி எஸ்.ஐ., சந்தனகருப்பு எடுத்துரைத்தார். முக்கிய பகுதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தில் மாணவிகள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் ஏந்திய அட்டைகளுடன் வலம் வந்தனர்.

