ADDED : மார் 11, 2024 05:43 AM
அ நிறம் | அளவு
திருப்புவனம்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு திருப்புவனத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் இருந்து விழிப்புணர்வு பேரணியை தாசில்தார் விஜயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் தாலுகா அலுவலகத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள், ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் ஏராளமானேர் பங்கேற்றனர்.
