ADDED : ஏப் 12, 2025 06:33 AM
அ நிறம் | அளவு
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் காரைக்குடி ரோட்டரி சங்கம் சார்பில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணியை பள்ளி தாளாளர் ரோஸ்லின் ஜூலியானா தொடங்கி வைத்தார்.
முதல்வர் மைக்கேல் ஜீவா, கல்லூரி முதல்வர் செல்லத்துரை கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் ஏற்பாட்டை செய்தார். அரியக்குடி ரயில்வே கேட்டில் இருந்து திருவேங்கடமுடையான் கோயில் வரை ஊர்வலம் சென்றது.
