ADDED : மே 02, 2025 06:26 AM

அ நிறம் | அளவு
காரைக்குடி: காரைக்குடியில் மே தினத்தை முன்னிட்டு மாவட்ட இருசக்கர வாகன பழுது நீக்குவோர் நலச்சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
டி.எஸ்.பி., பார்த்திபன் தொடங்கி வைத்தார். நகரச் செயலாளர் சக்திவேல் வரவேற்றார். சங்க தலைவர் பழனி தலைமை ஏற்றார். இணைச் செயலாளர் அழகர்சாமி முன்னிலை வகித்தார். பொருளாளர் மாரிமுத்து நன்றி கூறினார். ஆயிர வைசிய மஹாலில் மே தின கூட்டம் நடந்தது.
