ADDED : ஜூலை 12, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் அரசு மருத்துவமனை சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடை பிடிக்கப்படுகிறது. நேற்று திருப்புவனம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் ஸ்ரீவித்யா தலைமையில் கர்ப்பிணிகள், பொதுமக்களுக்கு உலக மக்கள் தொகை தினம் குறித்தும், குடும்ப கட்டுப்பாடு குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.