ADDED : ஆக 12, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: இல்லம் தோறும் தேசிய கொடி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் சிவகங்கையில் நடந்தது. நாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடு தோறும் தேசிய கொடி ஏற்றுவதை ஊக்குவிக்கும் விதமாக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமை தபால் நிலையம் முன் கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் துவக்கி வைத்தார்.
ஊர்வலம் அரண்மனைவாசல் உட்பட பல்வேறு வீதிகளில் சென்றது. அனைத்து தபால் நிலையங்களிலும் தேசிய கொடி விற்பனை செய்யப்படும் என தெரிவித்தனர். உதவி கோட்ட கண்காணிப்பாளர் சித்ரா, வெங்கடேசன், உப கோட்ட ஆய்வாளர் சுதன், தலைமை தபால் அலுவலர் வீரபாண்டியன் பங்கேற்றனர்.