ADDED : ஆக 16, 2026 11:55 PM

அ நிறம் | அளவு
சிவகங்கை: சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்திய அரசு அஞ்சல் துறை மூலமாக இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
சிவகங்கை அஞ்சல் துறை மூலம் தலைமை அஞ்சலகத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
ஊர்வலத்தை உதவி கோட்ட கண்காணிப்பாளர் முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஆய்வாளர் சுதன், தலைமை அஞ்சலக அதிகாரி தர்மாம்பாள் உள்ளிட்ட அஞ்சலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
