UPDATED : செப் 24, 2026 04:43 PM
ADDED : செப் 24, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரசம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி துவக்கி வைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி அனிதா கிறிஸ்டி முன்னிலை வகித்தார்.
போக்சோ நீதிபதி ரோகிணி, குடும்ப நல நீதிபதி பசும்பொன் சண்முகையா, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராமலிங்கம், தலைமை குற்றவியல் நீதிபதி மோகன ரம்யா, சார்பு நீதிபதி பாண்டி, கூடுதல் மகிளா நீதிபதி வைஷ்ணவி, மாவட்ட உரிமையில் நீதிபதி தீபதர்ஷினி கலந்து கொண்டனர்.
