ADDED : நவ 28, 2026 01:16 AM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்: திருப்புத்துார் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லுாரியில் போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் , விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
செயலர் நா.ஆறுமுகராஜன் தலைமை வகித்தார். ஆட்சி குழுத் துணைத்தலைவர் என்.ராமேஸ்வரன் முன்னிலை வகித்தார். கல்லூரி மாணவர்கள்,பேராசிரியர்கள் ‛ போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தை வலியுறுத்தி உறுதிமொழி பதாகைகளில் கையெழுத்து வாங்கினர்.முதல்வர் கேப்டன் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
பேராசிரியர் கே.பரமசிவகணேஷ் .அழகப்பா பல்கலை., நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.நடராஜன் பங்கேற்றனர். பேராசிரியர்கள் பி.சசிக்குமார், பி.மாரிச்சாமி, மரிய. ஜெ. ஆடலின் மோனிகா, ஏ.வனிதா ஒருங்கிணைத்தனர்.
