ADDED : ஏப் 18, 2026 04:42 PM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்:திருப்புத்துார் அருகே சவுமிய நாராயணபுரத்தில் முத்தையா மெமொரியல் கல்லுாரியில் தீ விபத்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை நிலைய அலுவலர் நவநீதகிருஷ்ணன் இயற்கை பேரிடர்களிலிருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை செயல்முறை விளக்கத்துடன் விளக்கினர். பேராசிரியர்கள் சிவராம மூர்த்தி, வைத்தியநாதன், மாணிக்கநாச்சியார்,பாண்டிச்செல்வி,சினேகா ஜெனிபர், ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
