ADDED : ஏப் 14, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:அரளிக்கோட்டையில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி மாணவர்கள் 26 நிமிட சாதனை விழிப்புணர்வு சிலம்பம் சுற்றினர்.
நிகழ்ச்சியில் 250 மாணவர்கள் அடிமுறை, சிலம்பம், யோகா, கராத்தே, வர்மகலை, களரி உள்ளிட்ட பல்வேறு கலைகள் மூலம் 26 நிமிடங்கள் வரை ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நடத்தினர். உங்கள் ஓட்டு, உங்கள் உரிமை என்பதை வலியுறுத்தி நடைபெற்ற நிகழ்ச்சியை திருப்புத்துார் டி.எஸ்.பி., செல்வக்குமார் துவக்கி வைத்தார். சிலம்ப வீரர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். ///
