ADDED : பிப் 11, 2025 05:03 AM
காரைக்குடி: காரைக்குடி அருகே கானாடுகாத்தான் எம்.சிடி.எம்., சிதம்பரம் செட்டியார் பள்ளியில் 'பரிக்சா பே சர்ச்சா' நிகழ்ச்சி நடைபெற்றது.
சி.பி.எஸ்.இ., தேர்வுக்குதயாராகும் 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும்விதமாக 'பரிக்சா பே சர்ச்சா' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கானாடுகாத்தானில் நடந்தது.
காரைக்குடி ஐ.ஓ.பி., சார்பில் இந்நிகழ்ச்சிக்காக நடமாடும் ஏ.டி.எம்., வாகனத்தில் திரைக்காட்சி ஏற்பாடு செய்திருந்தனர். இதன் மூலம் பிரதமர் மோடி மாணவர்களுக்கு தேர்வுக்கு தயாராகும் யுக்திகள் குறித்து விளக்கம் அளித்தார். காரைக்குடி ஐ.ஓ.பி.,முதுநிலை மண்டல மேலாளர் சாக்ரேயர் தலைமை வகித்தார்.
துணை மண்டல மேலாளர் செல்வநாதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தனர். வங்கியினர் மாணவர்களுக்கான தேர்வுக்கு தயாராகும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு அளித்தனர். பள்ளி முதல்வர், ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர்.

