ADDED : மார் 02, 2024 11:52 PM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்: திருப்புத்துார் புதுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தலைமை ஆசிரியர் மதிவாணன் தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சுப்பிரமணியன் வரவேற்றார். கவிஞர் கணேசன் சிறப்புரையாற்றினார். ஆசிரியர் தியாகானந்தம் நன்றி கூறினார்.
