ADDED : பிப் 02, 2026 06:27 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஆசிரியர் வள்ளிமயில் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். சமூக நலத்துறை அலுவலர்கள் சிவகலா, ஜோன்ஸ் இனியா முன்னிலை வகித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆசிரியர் முத்துமீனாள் நன்றி கூறினார்.
