UPDATED : ஜூன் 29, 2026 05:08 PM
ADDED : ஜூன் 29, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:சிவகங்கை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தின் சார்பாக அரசனுார் பாண்டியன் சரஸ்வதி யாதவ் கலைக்கல்லுாரியில் தீ விபத்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
உதவி மாவட்ட அலுவலர் ஜெயராணி, நிலைய அலுவலர்கள் அஜித்குமார், அண்ணாமலை தீ விபத்து ஏற்பட்டால் பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு எவ்வாறு தீயை அணைப்பது மற்றும் அங்குள்ளவர்களை பாதுகாப்பாக எப்படி மீட்பது குறித்து விளக்கம் அளித்து பேசினார். கல்லுாரி மாணவர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
