UPDATED : ஆக 10, 2026 04:41 PM
ADDED : ஆக 10, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:காளையார்கோவில் தனியார் பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் பெண்களின் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். எஸ்.ஐ., அமுதா, போலீசார் நாகசவுந்தரி, தேன்மொழி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 1091, அவசரகால உதவி எண்கள் 100 மற்றும் 112, சைபர் குற்ற உதவி எண் 1930, காவல் உதவி செயலி, சமூக வலைதளங்களில் ஏற்படும் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள், தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக கையாளுதல், இணையவழி மோசடிகளில் சிக்காமல் இருப்பது குறித்து விளக்கப்பட்டது.
