UPDATED : செப் 19, 2026 07:02 PM
ADDED : செப் 19, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சர்வதேச பாம்புக்கடி விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது.
முதல்வர் கலைவாணி தலைமை வகித்தார். மருத்துவ கண்காணிப்பாளர் தமிழ்வாணன், துணை முதல்வர் விசாலாட்சி, நிலைய மருத்துவர் முகமதுரபி, உதவி நிலைய மருத்துவர் தென்றல், வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்று துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்கள் மற்றும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
