/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம்
/
ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம்
ADDED : ஜன 29, 2024 05:44 AM

சிவகங்கை: சிவகங்கை நகர் 21 வது வார்டில் ரோட்டில் ஓடும் கழிவு நீரால் பொதுமக்கள் நடக்க முடியாமல் சிரமப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை நகராட்சி 21 வது வார்டில் உள்ளது பத்து நோன்பு தெரு. இந்த தெருவில் பத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதேபோல் வணிக நிறுவனங்களும் உணவகங்களும் உள்ளது. இந்த தெருவில் கழிவு நீர் கால்வாய் செல்லும் பகுதி அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கால்வாய்கள் அனைத்தும் ரோட்டில் விடப்படுகிறது.
இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து இப்ராகிம் கூறியதாவது, கடந்த 20 நாட்களுக்கு மேலாக கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.
நகராட்சியில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை, என்றார்.