/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சூறாவளிக்கு வாழை பப்பாளி மரங்கள் சேதம்
/
சூறாவளிக்கு வாழை பப்பாளி மரங்கள் சேதம்
ADDED : ஆக 30, 2025 11:48 PM

சிவகங்கை: சிவகங்கை அருகே மலம்பட்டி பகுதியில் சூறாவளியுடன் மழை பெய்ததால் வாழை, பப்பாளி மரங்கள் சாய்ந்து சேதமானது.
சிவகங்கை தாலுகா, மலம்பட்டி, தேவன்கோட்டை, கண்டாங்கிபட்டி, செவல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வாழை, பப்பாளி, மரவள்ளி கிழங்கு நடவு செய்துள்ளனர்.
இப்பகுதியில் அதிகபட்சமாக வாழை மரங்கள் அதிகளவில் வளர்த்து, அறுவடை செய்யப்படும் வாழை காய்களை மலம்பட்டி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். பப்பாளி மற்றும் மரவள்ளி கிழங்குகளை கேரளாவிற்கு அனுப்பி வருகின்றனர்.
தற்போது இப்பகுதியில் பப்பாளி விளைந்து பழங்கள் அறுவடைக்கு தயாரான நிலையில், நேற்று மாலை 4:00 மணிக்கு இப்பகுதியில் பலத்த சூறாவளியுடன் கூடிய மழை பெய்தது.
இதில், வாழை, பப்பாளி, மரவள்ளி கிழங்குகள் வேருடன் சாய்ந்து சேதமானது.
பேரிடர் கால நிவாரணம் தேவை இது குறித்து செவல் பட்டி விவசாயி கண்ணன் கூறியதாவது, இப்பகுதியில் நடவு செய்த பப்பாளி, வாழை, மரவள்ளி கிழங்குகள் வேருடன் சாய்ந்ததால், இப்பகுதி விவசாயிகளுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
அரசு உரிய விசாரணை செய்து, பேரிடர் கால நிவாரண உதவிகளை வழங்க வேண்டும், என்றார்.