ADDED : மே 14, 2026 12:01 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் வாழை இலை விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கட்டு ரூ.1200க்கு விற்ற நிலையில் தற்போது ரூ.400க்கு விற்கப் படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் விளையும் வாழை இலை மற்றும் வாழைத்தார்களை மலம்பட்டியில் செவ்வாய், வெள்ளிகளில் நடக்கும் கமிஷன் கடை சந்தை மூலம் விற்பனை செய்கின்றனர். இந்த சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
கடந்த வாரம் வரை தேர்தல் பணிகள் காரணமாக பல இடங்களிலும் விருந்துகள், ஓட்டல்களில் தேவை அதிகரிப்பால் ஒரு கட்டு வாழை இலை ரூ.1200க்கு விற்கப்பட்டது.
தற்போது விசேஷ காலங்கள் இல்லாததால் இலை விலை கடுமையாக குறைந்துள்ளது. ஒரு கட்டு 400க்கு ஏலம் எடுக்கப்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
