/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடியில் பலத்த காற்றினால் வாழைகள் சாய்ந்தது! நஷ்டத்தால் நிவாரணம் கோரும் விவசாயிகள்

ADDED : ஆக 05, 2024 10:00 PM

இளையான்குடி : இளையான்குடி, மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றினால் வாழை மரங்கள் சாய்ந்தது. பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட் பட்ட முனைவென்றி, குறிச்சி, கீழநெட்டூர்,கோச்சடை மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேல நெட்டூர், ஆலம்பச்சேரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேல் வாழை விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் பலத்த காற்றோடு மழை பெய்ததை தொடர்ந்து முனைவென்றியில் 160 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை முற்றிலும் சாய்ந்து விட்டதால் விவசாயிகள் கவலைக்குள்ளாகியுள்ளனர்.
முனைவென்றி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுரேஷ் கண்ணன் 34, கூறியதாவது:
முனைவென்றி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வாழை பிரதான தொழிலாக செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது வாழை மரங்கள் குலை தள்ளி காய்கள் காய்த்து வரும் நேரத்தில் நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் வாழை முற்றிலும் சாய்ந்து விட்டன.
ஏக்கருக்கு தற்போது வரை ரூ.30 ஆயிரம் செலவழித்துள்ள நிலையில் வாழை முற்றிலும் சாய்ந்து விட்டதால் என்ன செய்வதென்று தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.