நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி சித்தர் முத்து வடுகநாதர் கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மகேந்திர பூபதி, ஆய்வாளர் சுகன்யா தலைமையில் கோயில் ஊழியர்கள், பொதுமக்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் காணிக்கையாக ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரத்து 682 இருந்தது.
சிங்கம்புணரி வணிகர் நலச்சங்க தலைவர் வாசு, செயலாளர் திருமாறன், சிவகங்கை மாவட்ட கூட்டுறவு வங்கி அலுவலர் சுப்புலட்சுமி, சுகன்யா உடன் இருந்தனர்.