தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வங்கிகளை நோட்டமிடும் கொள்ளையர்கள்

வங்கிகளை நோட்டமிடும் கொள்ளையர்கள்

வங்கிகளை நோட்டமிடும் கொள்ளையர்கள்


ADDED : மார் 19, 2024 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2024 05:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புவனம் : திருப்புவனம் பகுதியில் உள்ள வங்கி அருகே நீண்ட நேரம் திருடர்கள் அமர்ந்து நோட்டமிட்டு பணம் எடுத்து செல்பவர்களை பின்தொடர்ந்து கொள்ளையடித்து செல்வதால் அப்பாவிகள் பணத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர்.

திருப்புவனத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகளில் சுற்றுவட்டார கிராமமக்கள் பலரும் கணக்கு வைத்துஉள்ளனர். அரசு, தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம், கடன் தொகை என அனைத்தும் வங்கிகள்மூலமாகவே வழங்கப்படுகிறது.

கிராமப்புற மக்கள் பலரும் விவசாயம், திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்கு வங்கிகளில் தங்க நகைகளை அடமானம் வைத்து பணம் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். தினசரி வங்கிகளில் அதிகளவு பணம் எடுப்பவர்களை நோட்டமிட்டு அவர்களை பின் தொடர்ந்து சென்று பணத்தை திருடி செல்வது தொடர்கதையாகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்டூடியோ உரிமையாளரை பின் தொடர்ந்து பணத்தை திருட முயன்றனர். லாடனேந்தல் வங்கியில் பணம் எடுத்து வந்த பெண்களை பின் தொடர்ந்து வந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றனர். தனியார் நிறுவன ஊழியர் திருப்புவனம் வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் எடுத்து சென்ற போது பின் தொடர்ந்து சென்று பணத்தை திருடிசென்றனர்.

இச்சம்பவங்கள் அனைத்திலும் வங்கியினுள் அமர்ந்து நோட்டமிட்டு பின் தொடர்ந்து சென்றுதான் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.ஆனால் போலீசார் தரப்பில் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதும் இல்லை.இவர்களை கண்காணிப்பதும் இல்லை.

மானாமதுரை கோட்ட குற்றப்பிரிவு போலீசார் திருட்டை தடுக்கவோ, குற்றவாளிகளை பிடிக்கவோ எந்த வித நடவடிக்கையும் எடுப்பதும் இல்லை. குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடந்து அப்பாவிகள் பணத்தை இழந்து வருகின்றனர்.

மாவட்ட காவல்துறை நிர்வாகம் வங்கிகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us