/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மதுக்கடைக்கு பூட்டு பா.ஜ.,வினர் கைது
/
மதுக்கடைக்கு பூட்டு பா.ஜ.,வினர் கைது
ADDED : பிப் 13, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : திருப்புத்துாரில் காரைக்குடி ரோட்டில் கோயில் அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை மாற்றக் கோரியும், அனுமதியின்றி மது விற்பதாக கூறி பா.ஜ.வினர் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். போலீசார்போராட்டம் நடத்த அனுமதியளிக்கவில்லை.
நேற்று மதியம் தெற்கு ஒன்றியத் தலைவர் தங்கபாண்டி, மாவட்டச் செயலர் சேதுசிவராமன் தலைமையில் பா.ஜ.,வினர் மதுக்கடைக்கு வந்தனர். கடைக்கு செல்லும் பாதையில் உள்ள கேட்டிற்கு பா.ஜ.வினர் பூட்டு போடுவதாக கூறினர்.
டி.எஸ்.பி.ஆத்மநாதன், இன்ஸ்பெக்டர் கலைவாணி உள்ளிட்ட போலீசார் பா.ஜ.,வினர் 18 பேரையும் கைது செய்தனர்.