UPDATED : ஜூலை 23, 2026 06:57 PM
ADDED : ஜூலை 23, 2026 06:55 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி:புதுவயல் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே மதுக்கடை செயல்பட்டு வருகிறது. பள்ளி செல்லும் வழியில் இருக்கும் மதுக்கடையால் மாணவ மாணவிகளுக்கு தினமும் பிரச்னைகள் ஏற்படுகிறது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இந்த மதுக்கடையை அகற்ற புதுவயல் பேரூராட்சியில் 4 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இதுவரை கடை அகற்றப்படவில்லை. இதனைக் கண்டித்து புதுவயல் பேரூராட்சி தலைவர் முகமது மீரா தலைமையில், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
