/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை மேம்பாலத்தில் தடுப்புகள்
/
மானாமதுரை மேம்பாலத்தில் தடுப்புகள்
ADDED : மார் 27, 2025 07:06 AM

மானாமதுரை: மானாமதுரை நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை குறைக்கவும், விபத்துக்களை தடுக்கும் வகையில் புதிதாக தடுப்பு அமைக்கப்பட்டுள்ளன.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை செல்லும் நான்கு வழிச்சாலையில் தல்லாகுளம் முனியாண்டி கோயில் அருகே இருந்து புது பஸ் ஸ்டாண்ட் வரை நான்கு வழி சாலை மேம்பாலத்தில் சென்டர் மீடியனில் தடுப்பு ஏதும் இல்லாமல் இரவில் ரோட்டின் எதிர்புறத்தில் இருந்து வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தால் வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
மேலும் நகருக்குள் செல்லும் இந்த மேம்பாலத்தில் விளக்குகள் இல்லாததாலும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.இதையடுத்து மானாமதுரை நான்கு வழி சாலை மேம்பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை குறைக்கும் வகையிலும், விபத்துக்களை தடுக்கும் வகையிலும் சென்டர் மீடியனில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளன. இதனால் எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சம் ஓரளவிற்கு குறையும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.