ADDED : டிச 20, 2024 02:50 AM
சிவகங்கை; சிவகங்கை பாரதி மண்டலம் ஜென்எல்பி அகாடமி இணைந்து பாரதியாரின் 142வது பிறந்த நாள் விழாவை முப்பெரும் விழாவாக கொண்டாடியது. சிறுகதைப் போட்டிகளில் தேர்வான 100 சிறுகதைகளை தொகுத்து நுாலாக்கி வெளியிடப்பட்டது. ஆர்த்தி வரவேற்றார். கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்து நுாலை வெளியிட்டார். தமிழாசிரியர் கிருஷ்ணவேணி,கோவை பார்க் கல்வி குழும லட்சுமணன், வழக்கறிஞர் ஜெயசிம்மன், ராமநாதபுரம் ஆதித்ய சேதுபதி கலந்து கொண்டனர்.
இரண்டாவது அமர்விற்கு பார்க் கல்விக் குழும தலைவர் அனுஷா ரவி தலைமை வகித்தார். திரைப்பட இயக்குநர் ஞான.ராஜசேகரன் கலைஞர்களுக்கு இளம் பாரதி விருது வழங்கினார். மூன்றாவது அமர்வில் புதுக்கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். வழக்கறிஞர் ராம்பிரபாகர் முன்னிலை வகித்தார். கவிஞர் முருகேஷ் கவிஞர் குமார் எழுதிய மறுபடி தொடாத மழைத்துளி நுாலை வெளியிட்டார். சிவகங்கை தமிழ்சங்க தலைவர் அன்புத்துரை, பயிற்சியாளர் சதீஸ்சேம், ரமணவிகாஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன் பேசினர். நல்லாசிரியர் கண்ணப்பன், பகீரதநாச்சியப்பன், தமிழ்ச்சங்க நிறுவனத் தலைவர் ஜவஹர் கிருஷ்ணன், சாம்பவிகா பள்ளி செயலாளர் சேகர் கலந்துகொண்டனர்.