ADDED : டிச 15, 2025 05:54 AM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் தமிழ்த் துறையின் வெள்ளி வட்டம் சார்பில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா நடந்தது. முதல்வர் நாவுக்கரசு தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பாளர் இளங்கோ வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் கண்ணதாசன் வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் மாரி தலைமையில் நடந்த கவியரங்கில் அதிர்ஷ்ட லட்சுமி, நூரூல்குதா, தேவிஸ்ரீ, ஜெயஸ்ரீ, சபீத்குமார், சந்தோஷ்குமார் கவிதைகள் பாடினர். ஒருங்கிணைப்பாளர் தவமணி நன்றி கூறினார்.
