ADDED : அக் 21, 2024 05:03 AM
சிவகங்கை: சிவகங்கையில், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் பாரதி விழா நடைபெற்றது.
முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் நல்லாசிரியர் கண்ணப்பன், மாவட்ட தலைவர் பழனியப்பன், செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.
'பாரதியார் இன்றைக்கு தேவை' என்ற தலைப்பில் பட்டிமன்ற நடுவர் சாலமன்பாப்பையா சிறப்புரை ஆற்றினார். நகர் செயலாளர் யுவராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பொறியாளர் பாரதிதாசன், மலைராம் ரெஸ்டாரன்ட் உரிமையாளர் பாண்டிவேல், ரமணவிகாஷ் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன் வாழ்த்துரை வழங்கினர். விழாவில், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் ஜோசப் கமலா ராணி, முத்துக்குமார், அமுதா, வனிதா, ஜாய்சி மேரி, ராஜ்குமார், கபில்தேவ், லட்சுமி, வெற்றிவேந்தன் ஆகியோரை பாராட்டி விருதுகள் வழங்கினர். பாரதி இசை கல்வி கழகம் சார்பில் கலை நிகழ்ச்சி நடந்தது.
நகர் தலைவர் சுந்தரமாணிக்கம் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன், நல்லாசிரியர் பகீரத நாச்சியப்பன், தமிழ் சங்க நிறுவன தலைவர் ஜவஹர் கிருஷ்ணன், நாட்டரசன் கோட்டை கே.எம்.எஸ்.சி., பள்ளி தாளாளர் கண்ணப்பன், ஆறுமுகசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட பொருளாளர் மதிவாணன் நன்றி கூறினார்.