நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை பிறந்தநாளை முன்னிட்டு ஜன., 4 ல் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அன்றைய தினம் காலை 7:00 மணிக்கு சிவகங்கை அரண்மனைவாசலில் போட்டி துவங்கும், வயது 13 க்கு உட்பட்ட மாணவருக்கு 15 கி.மீ.,, மாணவிக்கு 10 கி.மீ., வயது வயது 17க்கு உட்பட்ட மாணவருக்கு 20 கி.மீ., மாணவிக்கு 15 கி.மீ., துாரம் நடைபெறும்.
வயது சான்று, சொந்த சாதாரண சைக்கிளுடன் வர வேண்டும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ஜன.,4 அன்று காலை 7:00 மணிக்குள் சிவகங்கை அரண்மனை வாசலில் பங்கேற்க வேண்டும், என்றார்.

