ADDED : ஜன 25, 2025 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர், தனது தாத்தா வீட்டிற்கு 'டிவி' பார்ப்பதற்காக அடிக்கடி வந்துஉள்ளார். அருகில் வசிக்கும் பீகாரைச் சேர்ந்த முகமது ஆஷாத் அன்சாரி 28, என்பவர் சிறுமியுடன் பழகி வந்துள்ளார்.
சிறுமியின் தாத்தா இல்லாத நேரத்தில், வீட்டிற்குள் நுழைந்த இளைஞர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சோதனை செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
முகமத் ஆஷாத் அன்சாரி மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

