தேவகோட்டை: காரைக்குடி தொகுதியைச் சேர்ந்த தேவகோட்டை நகர், தேவகோட்டை ஒன்றியம் வடக்கு பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகர செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். நகர பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தேவகோட்டை வடக்கு ஒன்றிய மையக்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் ராமசுப்பையா தலைமையில் நடந்தது. ஒன்றிய பொது செயலாளர் பொன்னம்பலம், கருப்பையா முன்னிலை வகித்தனர். சக்தி கேந்திர நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சிவகங்கை எம்.பி.தொகுதி பொறுப்பாளர் அர்ஜுனமூர்த்தி கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார். மாவட்ட பொது செயலாளர் நாகராஜன், மாநில குழு உறுப்பினர் காசிராஜா, மாவட்ட ஆன்மிக பிரிவு தலைவர் முத்துராமன், மாவட்ட செயலாளர் லட்சுமி, மாவட்ட மகளிர் அணி பொது செயலாளர் பத்மா பங்கேற்றனர்.