
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : காளையார்கோவிலில் கல்லுவழியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை தாக்கி நகை கொள்ளையடித்தவர்களை கைது செய்யாத போலீஸ், தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., மாவட்டத் தலைவர் சத்தியநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலுார் இப்ராஹிம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், இளைஞர் அணி மாநில செயலாளர் ராஜா, மாவட்ட துணைத் தலைவர் சுகனேஸ்வரி, மாவட்ட பொது செயலாளர்கள் மார்த்தாண்டன், நாகராஜன், கந்தசாமி, சங்கரசுப்பிரமணியன், மகளிர் அணி மாவட்ட தலைவர் இந்திரா, மண்டல் தலைவர்கள் மயில்சாமி, பில்லப்பன், வெற்றி பிரபாகர்,நாட்டரசன், விவசாய அணி பொது செயலாளர் சரவணன், விவசாய அணி மாவட்ட தலைவர் சசி, நகர் தலைவர் உதயா, முத்துமுனியாண்டி, பாண்டி, காளைராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.